இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,689 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 137 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,689 பேருக்கு கொரோனா
பதிவு: ஜனவரி 27, 2021 10:30
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,689 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 13,320 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ள நிலையில், 137 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 1,06,89,527 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,03,59,305 பேர் குணமடைந்துள்ளனர். 1,53,724 உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 176498 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 16-ந்தேதியில் இருந்து தற்போது வரை 20,29,480 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
Related Tags :