பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 23 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடான நார்வேயில் கடந்த மாதம் இறுதி முதல் அமெரிக்க நிறுவனமான பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும், வயதானோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
உயிரிழந்த அனைவரும் 80-வயதிற்க்கு மேற்பட்டவர்கள் ஆகும். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 29 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளது என நார்வே அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பைசர் தடுப்பூசியை கவனமாக பயன்படுத்த நார்வே அரசு அறிவுறுத்தியுள்ளது. வயதானவர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்துவதை குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 23 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் பைசர் தடுப்பூசியின் வினியோகத்தை அந்நிறுவனம் குறைத்துள்ளது.