30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகவை 20 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கேரளா தங்கம் கடத்தல் வழக்கு: 20 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது என்.ஐ.ஏ.
பதிவு: ஜனவரி 05, 2021 20:28
கடத்தி வரப்பட்ட தங்கம்
தூதரகம் பெயரை பயன்படுத்தி கேரள மாநிலத்தில் தங்கம் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்த நிலையில் தேசிய புலனாய்வு முகமை (NIA) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வெப்னா சுரேஷ் உள்ளிட்ட பலரை என்.ஐ.ஏ. கைது செய்தது.
இந்த நிலையில் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் 20 பேருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது என்.ஐ.ஏ. ஸ்வெப்னா சுரேஷ், பிஎஸ் சரித் ஆகியோர்ன மீது சட்டவிரோத நடவடிக்கை சட்டத்தின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரும் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் வேலைப்பார்த்த முன்னாள் ஊழியர்கள் ஆவார்கள். தூதரகம் பெயரில் தங்கம் கடத்தலுக்கு இவர்கள் இருவரும் முன்னதாக வேலைப்பார்த்ததை பயன்படுத்திக் கொண்டனர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேடி ரமீஸ், பி. முகமது ஷபி, ஏ.எம். ஜலால், இ.சைதாலவி, பி.டி. அப்து, ராபின்ஸ் ஹமீத், முகமதலி இப்ராஹிம் உள்ள 18 பேர் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பிடித்துள்ளது.
கடந்த அண்டு ஜூலை மாதம் 5-ந்தேதி 30 கிலோ தங்கம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இதனடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை சரித், ஸ்வெப்னா சுரேஷ், பைசல் பரீத், சந்தீப் நாயர் மற்றும் பலர் மீது கடந்த அண்டு ஜூலை மாதம் 10-ந்தேதி வழக்குப்பதிவு செய்தது.
ஜூலை 11-ந்தேதி பெங்களூருவில் மறைந்து இருந்த சுரேஷ் மற்றும் சந்தீப்பை என்ஐஏ கைது செய்தது.
Related Tags :