அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று தேமுதிக மாநில துணை செயலாளர் எல்கே சுதீஷ் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்- எல்கே சுதீஷ் பேட்டி
பதிவு: ஜனவரி 04, 2021 08:17
எல்கே சுதீஷ்
சென்னை:
தே.மு.தி.க. மாநில துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட
கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:-சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க.வின் நிலைப்பாடு குறித்து முடிவு செய்து விட்டீர்களா?
பதில்:-விரைவில் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வின் நிலைப்பாடு குறித்து எங்கள் கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி விஜயகாந்த் முடிவு
செய்வார்.
கேள்வி:கூட்டணியில் மாற்றம் வருமா?
பதில்:-இப்போதைக்கு எதுவும் இல்லை. அ.தி.மு.க. கூட்டணியில் தான் நாங்கள் இருக்கிறோம். தேர்தல் தேதியை அறிவிக்கட்டும், பின்னால் பேசுவோம்.
கேள்வி:-விஜயகாந்தை எப்போது பார்க்கலாம்?
பதில்:-தேர்தல் பிரசாரத்திற்கு விஜயகாந்த் வருவார். கண்டிப்பாக நீங்கள் பார்க்கலாம்.
கேள்வி:-அமைச்சர்கள் மீது ஊழல் புகார்களை மு.க.ஸ்டாலின் கவர்னரிடம் கொடுத்து இருக்கிறாரே?
பதில்:-அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரில் உண்மை இருந்தால் கவர்னர் நடவடிக்கை எடுப்பார்.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.