கர்நாடக மாநிலத்தில் ஆட்சியை கலைத்து தேர்தலை நடத்திப்பாருங்கள், காங்கிரஸ் மெஜாரிட்டி வெற்றி பெறும் என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தல் நடத்திப்பாருங்கள்: பா.ஜனதா-வுக்கு சித்தராமையா சவால்
பதிவு: டிசம்பர் 31, 2020 20:34
சித்தராமையா
கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா, எடியூரப்பாவின் முதலமைச்சர் பதவி குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அவருடைய முதல்வர் நாற்காலி ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது என்றார்.
இதுகுறித்து சித்தராமையா கூறுகையில் ‘‘எடியூரப்பா பகல் கனவு கண்டுகொண்டிருக்கிறார். சட்டசபை தேர்தலை நாளை நடத்தினால் கூட காங்கிரஸ் வெற்றிபெறும். மெஜாரிட்டி பெற்று மீண்டும் ஆட்சி பிடிக்கும்.
அவருடைய முதல்வர் நாற்காலி ஆட்டம் கண்டுள்ளது. அவருடைய இடத்தை பாதுகாத்து விட்டதாவும், பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜனதா 60 சதவீத இடங்களை வென்றதாகவும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் நாங்கள்தான் நம்பர் ஒன். பா.ஜனதா அல்ல. நாங்கள் ஆதரவு கொடுத்த வேட்பாளர்கள் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். பா.ஜனதா ஏராளமான இடத்தில் வேட்பாளர்களையே நிறுத்தவில்லை’’ என்றார்.
Related Tags :