மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வருகிற 13-ந்தேதி முதற்கட்ட தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்.
‘சீரமைப்போம் தமிழகத்தை’ தலைப்பில் 13-ந்தேதி முதற்கட்ட தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் கமல் ஹாசன்
பதிவு: டிசம்பர் 10, 2020 20:24
கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கிறது. கூட்டணி வைத்தோ அல்லது தனியாகவோ போட்டியிட இருக்கிறது. இதற்கான வேலைகளை கட்சி தொண்டர்களும், அக்கட்சியின் தலைவருமான கமல் ஹாசனும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைபை்பில் கமல் ஹாசன் தென் தமிழகத்தில் இருந்து சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தல் பரப்புரையை மேற்கொள்கிறார் என்று மக்கள் நீதிமய்யம் கட்சி தெரிவித்துள்ளா்.
டிசம்பர் 13-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரப்புரை செய்கிறார்.
Related Tags :