புரெவி புயல் வலுவிழந்து ஆழந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலைக்கொண்டிருந்த நிலையில், தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.
மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்தது
பதிவு: டிசம்பர் 04, 2020 21:15
காற்றழுத்தத்தாழ்வு மண்டலம்
வங்கக் கடலில் உருவான புரெவி புயல் இலங்கையின் திருகோணமலையின் வடக்குப் பகுதியில் கரையை கடந்தது. அதன்பின் பாம்பன் அருகில் வந்து பாம்பனுக்கும் கன்னியாகுமரிக்கும் இடையில் புயலாக கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
ஆனால் பாம்பன் அருகில் வரும்போது புரெவி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகியது. அதோடு பாம்பன் அருகே அப்படியே நகராமல் நிலைகொண்டது. இதனால் வட தமிழகத்தில் மழை கொட்டித்தீர்த்தது.
இன்னும் இரணடு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆழந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காற்றழுத்தத் தாழ்வாக வலுவிழந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 2 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என தெரிவித்துள்ளது.
Related Tags :