காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை என போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை - போலீஸ்
பதிவு: நவம்பர் 28, 2020 00:26
மெகபூபா முப்தி
ஸ்ரீநகர்:
காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி தான் மீண்டும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார். தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ள தனது கட்சி தலைவர் வாகித் உர் ரகுமான் பர்ராவின் குடும்பத்தினரை பார்த்து ஆறுதல் சொல்வதற்கு தான் புல்வாமா செல்ல போலீஸ் அனுமதிக்கவில்லை என்றும் கூறி இருந்தார். தனது இல்லத்தில் பத்திரிகையாளர் சந்திப்புக்கும் தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறி உள்ளார்.
இதுபற்றி போலீசார் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளனர். அதில் அவர்கள், “மெகபூபா முப்தி வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை. பாதுகாப்பு காரணங்களையொட்டி அவர் தனது புல்வாமா பயணத்தை ஒத்தி போடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்” என கூறி உள்ளனர்.
Related Tags :