சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 3 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 3 ஆயிரம் கனஅடியாக உயர்வு
பதிவு: நவம்பர் 25, 2020 16:51
செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திடீரென அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடந்த 2015-ம் ஆண்டு சென்னை வெள்ளத்தில் மிதந்தது. அதுபோன்று தற்போது நடந்து விடக்கூடாது என்பதால், கனமழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர்.
சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்றில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்கியது.
இதனால் இன்று மதியம் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. அதன்பின் 1500 கனஅடியாக உயர்த்தப்பட்டது.
தற்போது ஏரிக்கு சுமார் 3500 கனஅடி நீர் வந்துகொண்டிருப்பதாக தெரிகிறது. இதனால் அணையில் இருந்து 3000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
Related Tags :