மெரினா, பெசன்ட்நகர், திருவான்மியூர் போன்ற கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் வரவேண்டாம் என்று கூடுதல் போலீஸ் கமிஷனர் தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் கடல் அலைகள் சீற்றம் மிகுந்து காணப்படுவதால், மெரினா, பெசன்ட்நகர், திருவான்மியூர் போன்ற கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் வரவேண்டாம் என்று கூடுதல் போலீஸ் கமிஷனர் தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மெரினா கடற்கரை பகுதிக்கு நேற்று சென்ற பொதுமக்களை போலீசார் எச்சரிக்கை விடுத்து விரட்டி அடித்தனர்.
இதுபோல் காசிமேடு, எண்ணூர் போன்ற கடற்கரை பகுதிக்கும் பொதுமக்கள் செல்ல வேண்டாம், என்று கூடுதல் கமிஷனர் அருண் கேட்டுக்கொண்டுள்ளார்.