குருவாயூர், திருச்செந்தூர், ராமேஸ்வரம் உள்பட 14 வழித்தடங்களில் சிறப்பு ரெயில்களை இயக்க வாரியத்திடம் தெற்கு ரெயில்வே கோரிக்கை வைத்துள்ளது.
குருவாயூர், திருச்செந்தூர், ராமேஸ்வரம் உள்பட 14 வழித்தடங்களில் சிறப்பு ரெயில்களை இயக்க கோரிக்கை
பதிவு: நவம்பர் 23, 2020 16:18
சிறப்பு ரெயில்
கொரோனா பாதிப்பு காரணமாக பயணிகள் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் இயக்கப்படுகின்றன. சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்ட ரெயில்கள் இதுவரை இயக்கப்படாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் எழும்பூர், திருச்செந்தூர், குருவாயூர், ராமேஸ்வரம் உள்பட 14 வழித்தடங்களில் சிறப்பு ரெயில்களை இயக்க அனுமதிக்கவும், 3 பண்டிகை கால சிறப்பு ரெயில்களை வழக்கமான ரெயில்களாக இயக்க அனுமதிக்கவும், 2 பயணிகள் ரெயில்களை விரைவு ரெயில்களாக இயக்க அனுமதிக்கவும் ரெயில்வே வாரியத்திற்கு தெற்கு ரெயில்வே கோரிக்கை வைத்துள்ளது.
எந்தெந்த ரெயில்கள் என்ற விவரம் வருமாறு:-
எழும்பூர்-நாகர்கோவில் (வாராந்திர ரெயில்), எழும்பூர்-காரைக்கால் (தினசரி), திருவனந்தபுரம்-நிலாம்பூர் (தினசரி), சென்ட்ரல்- திருவனந்தபுரம் (தினசரி), கோவை-நாகர்கோவில் (தினசரி), சென்ட்ரல்- ஐதராபாத் (தினசரி), எழும்பூர்-மன்னார்குடி (தினசரி) ஆகிய வழித்தடங்களில் ரெயில்களை இயக்க முன்மொழியப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி-ஹவுரா (வாராந்திர ரெயில்), மதுரை-பிகானீர் (வாராந்திர ரெயில்), திருவனந்தபுரம்- கோர்பா (வாராந்திர ரெயில்) ஆகிய பண்டிகை கால சிறப்பு ரெயில்களை வழக்கமான சிறப்பு ரெயில்களாகவும், மதுரை-புனலூர், நாகர்கோவில்-கோவை பயணிகள் ரெயில்களை விரைவு ரெயில்களாக இயக்க அனுமதிக்கவும் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
Related Tags :