துரைமுருகனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க முடியுமா என்று மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
துரைமுருகனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க முடியுமா? - ஜெயக்குமார் கேள்வி
பதிவு: நவம்பர் 23, 2020 13:14
அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை:
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாள் பயணமாக சென்னைக்கு வருகை தந்த போது, திமுகவின் வாரிசு அரசியல் குறித்தும், ஊழல் அரசியல் குறித்தும்
கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், வாரிசு அரசியல் என்பது அதிமுக, பாஜக உள்பட அனைத்து கட்சிகளிலும் இருப்பதாகவும்
ஆனால் திமுகவை மட்டுமே சுட்டிக் காட்டுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் துரைமுருகனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க முடியுமா என்று மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளார்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “அரசியல் இல்லாமல் உலகம், நாடு, மாநிலம், ஏன் யாரும் இல்லை. எனவே அரசு
நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது தவறில்லை. என் மகனை நான் அரசியலுக்கு கொண்டு வரவில்லை. ஜெயலலிதாதான் கொண்டு வந்தார். திமுக வழிவழியாக வாரிசு
அரசியல் செய்து வருகின்றனர். அதிமுகவில் அதுபோன்று இல்லை. அதிமுகவில் கொடி பிடித்தவர் கூட முதல்வராக முடியும், திமுகவில் முடியுமா?
துரைமுருகனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க மு.க.ஸ்டாலின் தயாரா? உதயநிதியை அறிப்பாரே தவிர துரைமுருகனை அறிவிக்கமாட்டார்” என்று தெரிவித்தார்.
Related Tags :