நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்த நிலையில் அவரின் பிஆர்ஓ அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
ரஜினி உடல்நிலை குறித்து பரவும் தகவல் உண்மையா? - பி.ஆர்.ஓ விளக்கம்
பதிவு: நவம்பர் 22, 2020 13:20
ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. அதில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் உலா வந்தன.
இந்நிலையில், இதுகுறித்து அவரது பிஆர்ஓ ரியாஸ் விளக்கமளித்துள்ளார். ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து பரவும் தகவல் உண்மையில்லை என்று தெரிவித்துள்ள அவர், ரஜினி நலமுடன் இருப்பதாக கூறியுள்ளார். யாரோ விஷமிகள் இவ்வாறு வதந்தியை கிளப்பி விட்டிருப்பதாக ரியாஸ் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் ஐதராபாத்தில் நடைபெற உள்ள அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளார். எஞ்சியுள்ள படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
Related Tags :