கோவா மாநில முன்னாள் கவர்னரும், பா.ஜனதா மூத்த தலைவருமான மிருதுளா சின்ஹா மரணத்திற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
கோவா மாநில முன்னாள் கவர்னரும், பா.ஜனதா மூத்த தலைவருமான மிருதுளா சின்ஹா நேற்று திடீரென மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77.
பீகாரை சேர்ந்த மிருதுளா சின்ஹா சிறந்த எழுத்தாளர். ஜனசங்கத்தில் இருந்து பா.ஜனதாவுக்கு வந்தவர். பா.ஜனதாவின் மகளிரணி தலைவராகவும் பதவி வகித்து உள்ளார். மிருதுளா சின்ஹாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இரங்கல் தெரிவித்து உள்ளனர்.