பேருந்துக்குள் இருந்த பயணிகள் குடைகளை பிடித்தபடி பயணம் செய்த சம்பவத்துக்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பருவமழை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
கனமழை காரணமாக அரசு பேருந்துகள் சிலவற்றின் கூரை சேதம் அடைந்தது. இதனால் பேருந்துக்குள் இருந்த பயணிகள் குடைகளை பிடித்தபடி பயணம் செய்யும் படங்கள் சமூக வலைதளங்களில் பரவின.
இது குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
புத்தம் புது பஸ் விட்டிருக்கிறது அரசு. மழை பெய்ததும் உள்ளே ஒழுக, குடைப்பிடித்து உட்கார்ந்திருக்கிறார்கள் பயணிகள். உள்ளே ஒழுகியது மழைநீரா, ஊழலா? பயணிகள் பிடித்தது குடையா, ஆளுங்கட்சிக்கான கறுப்புக் கொடியா?”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.