பீகார் மாநில சட்டசபை தேர்தலில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் குறைவான ஓட்டு வித்தியாசத்திலேயே வென்றுள்ளனர்.
பீகார் தேர்தல்: பெரும்பாலான வேட்பாளர்கள் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
பதிவு: நவம்பர் 11, 2020 16:06
12 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிரேம் முகையா
பீகார் மாநில சட்டசபை தேர்தலில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் குறைவான ஓட்டு வித்தியாசத்திலேயே வென்றுள்ளனர். அதில் 8 வேட்பாளர்கள் ஆயிரம் ஓட்டுகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.
ஹில்சா தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் பிரேம் முகையா 12 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு 61 ஆயிரத்து 848 ஓட்டுகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் சக்திசிங் யாதவுக்கு 61 ஆயிரத்து 836 ஓட்டுகளும் கிடைத்துள்ளன.
பார்பிகா தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் சுதர்சனம் குமார் காங்கிரஸ் வேட்பாளர் கஜனன்சாகியை 113 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
போர் தொகுதியில் வெற்றிபெற்ற வேட்பாளருக்கும், தோற்ற வேட்பாளருக்கும் இடையே 462 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம் இருந்தன.
பக்ரி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சூரியகாந்த் பஸ்வான் 777 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
டெக்கிரி தொகுதியில் ராஷ்ரிய ஜனதா தளம் வேட்பாளர் பகதூர்சிங் பாரதீய ஜனதா வேட்பாளர் சத்திய நாராயண்சிங்கை 464 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
ஷிராக் பஸ்வானின் லோக்ஜன சக்தி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. மதிகளி தொகுதியில் இந்த கட்சி சார்பில் போட்டியிட்ட ராஜ்குமார்சிங் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் யோபோசிங்கை 333 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ராஜ்குமார்சிங்குக்கு 63 ஆயிரத்து 364 ஓட்டுகளும், யோபோசிங்குக்கு 61 ஆயிரத்து 31 ஓட்டுகளும் கிடைத்திருந்தன.
Related Tags :