பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ் குமார் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 10 மந்திரிகள் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
நிதிஷ்குமார் அமைச்சரவையில் இருந்த 10 மந்திரிகள் தோல்வி
பதிவு: நவம்பர் 11, 2020 15:42
நிதிஷ். குமார், தேஜஸ்வி
பீகார் சட்டசபை தேர்தலில் மந்திரிகள் 24 பேருக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டு இருந்தது. ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த 14 மந்திரிகள் மீண்டும் போட்டியிட்டனர். அதில் 6 பேர் மட்டும் வெற்றி பெற்றார்கள். 8 பேர் தோல்வி அடைந்தனர்.
பாரதீய ஜனதாவை சேர்ந்த 10 அமைச்சர்களுக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் 8 பேர் வெற்றி பெற்றனர். 2 பேர் தோல்வி அடைந்தனர்.
தினாரா சட்டமன்ற தொகுதியில் கூட்டுறவு மந்திரி ஜெய்சிங் ஐக்கிய ஜனதாதளம் சார்பில் போட்டியிட்டார். அவரை ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் விஜய் மண்டல் தோற்கடித்தார்.
விஜய் மண்டலுக்கு 59 ஆயிரத்து 541 வாக்குகளும், லோக்ஜனசக்தி வேட்பாளர் ராஜேந்திர சிங்குக்கு 51 ஆயிரத்து 313 வாக்குகளும் கிடைத்தது. மந்திரி ஜெய்சிங் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அவருக்கு 27 ஆயிரத்து 252 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
கல்வி மந்திரியாக இருந்த கிருஷ்ணானந்தன் பிரசாத் ஜெகனாபாத் தொகுதியில் ஐக்கிய ஜனதாதள வேட்பாளராக போட்டியிட்டார். அவரை 34 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராஷ்டிரிய ஜனதாதள வேட்பாளர் குமார்கிருஷ்ணா தோற்கடித்தார்.
கிராமப்புற பணிகள் துறை மந்திர சைலேஷ்குமார் ஜமல்பூர் தொகுதியில் ஐக்கிய ஜனதாதள வேட்பாளராக நின்றார். அவரை காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் அஜய்குமார் சிங் தோற்கடித்தார்.
ராஜ்பூர் தொகுதியில் போக்குவரத்து மந்திரி சந்தோஷ்குமார் ஐக்கிய ஜனதாதளம் சார்பில் போட்யிட்டார். அவரை காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாத் 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
ஹதுவா தொகுதியில் மந்திரி ராம்சேவக் ஐக்கிய ஜனதாதளத்தில் போட்டியிட்டார். அவரை 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராஷ்டிரிய ஜனதாதள வேட்பாளர் ராஜேஷ்சிங் தோற்கடித்தார்.
சிங்ஷ்ர் தொகுதியில் பழங்குடியினர் துறை மந்திரி ரமேஷ் ரிஷிதேவ் ஐக்கிய ஜனதாதளம் சார்பில் போட்யிட்டார். அவரை ராஷ்டிரிய ஜனதாதள வேட்பாளர் சந்திரஹாஸ் 6 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
சிறுபான்மை நலத்துறை மந்திரி கிரோஸ்அகமது ஐக்கிய ஜனதாதளம் சார்பில் சிக்தா தொகுதியில் போட்டியிட்டார். அவரை 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராஷ்டிரிய ஜனதாதள வேட்பாளர் குர்ஷித் தோற்கடித்தார்.
பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்ட மந்திரிகள் சுரேஷ்குமார் சர்மா, பிரிஷ் கிஷோர் ஆகியோரும் தோல்வி அடைந்தார்கள்.
Related Tags :