பீகார் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 74 தொகுதிகளுக்கு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 243 தொகுதிகளில் இதுவரை 74-க்கு முடிவு அறிவிப்பு
பதிவு: நவம்பர் 10, 2020 20:51
பா.ஜனதா தொண்டர்கள்
பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. 243 தொகுதிகளில் பதிவான வாக்குகளை முழுவதுமாக எண்ணி முடிக்க காலதாமதம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை 74 தொகுதிகளுக்கு மட்டுமே முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பா.ஜனதா 22 இடங்களிலும், ராஷ்டீரிய ஜனதா தளம் 20 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 13 இடங்களிலும், சிபிஐ (எம்-எல்) ஐந்து இடங்களிலும் விஐபி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
பா.ஜனதா- ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 126 இடங்களிலும், மகா கூட்டணி 110 இடங்களிலும் முன்னணி வகிக்கின்றன.
Related Tags :