ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அரசின் முடிவு மனநிறைவு அளிக்கிறது என்று முதல்-அமைச்சருக்கு, டாக்டர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அரசின் முடிவு மனநிறைவு அளிக்கிறது: முதல்-அமைச்சருக்கு, ராமதாஸ் பாராட்டு
பதிவு: நவம்பர் 06, 2020 07:31
ராமதாஸ்
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆன்லைன் சூதாட்டத்தை நடத்துபவர்கள்
குற்றவாளிகளாக கருதப்படுவார்கள் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது.
ஆன்லைன் சூதாட்டத் தடை பல குடும்பங்களை பாதுகாக்கும். நடுத்தெருவுக்கு வருவதைத் தடுக்கும். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து
தற்கொலை செய்து கொண்ட ஏராளமான இளைஞர்களின் மரணத்துக்கு நீதி வழங்குவதாக அமையும்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக 4 ஆண்டுகளுக்கும் மேலாக நான் குரல் கொடுத்து வருகிறேன். ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை
விதிக்கும் அரசின் முடிவு மனநிறைவளிக்கிறது. இது பா.ம.க.வின் தொடர் வலியுறுத்தலுக்கு கிடைத்த வெற்றி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :