தேவ்தத் படிக்கல் அரைசதம் அடித்தாலும் விராட் கோலி, டி வில்லியர்ஸ் மீண்டும் ஏமாற்றம் அளிக்க டெல்லிக்கு 152 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆர்சிபி.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 153 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆர்சிபி
பதிவு: நவம்பர் 02, 2020 21:22
நோர்ட்ஜே, தேவ்தத் படிக்கல்
ஐபிஎல் தொடரின் 55-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. ஆர்சிபி-க்கு எதிராக டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி ஆர்சிபி அணியின் ஜோஷ் பிலிப், தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாட முடியவில்லை. இதனால் ஆர்சிபி-யின் ஸ்கோர் மந்தமாகவே உயர்ந்தது.
ஜோஷ் பிலிப் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி 29 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். அப்போது ஆர்சிபி 12.3 ஓவரில் 82 ரன்கள் எடுத்திருந்தது. தேவ்தத் படிக்கல் அரைசதம் அடித்து 50 ரன்னிலேயே வெளியேறினார்.
அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் 21 பந்தில் 35 ரன்கள் எடுத்து கடைசி ஓவரின் 2-வது பந்தில் ஆட்டமிழக்க, ஷிவம் டுபே 11 பந்தில் 17 ரன்கள் அடிக்க, ஆர்சிபி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களே அடித்தது.
டெல்லி அணியில் நோர்ஜோ 3 விக்கெட்டும், ரபடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
Related Tags :