கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இங்கிலாந்தில் டிசம்பர் 2-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் டிசம்பர் 2 வரை மீண்டும் முழு ஊரடங்கு - பிரதமர் போரிஸ் ஜான்சன்
பதிவு: நவம்பர் 01, 2020 02:21
பிரதமர் போரிஸ் ஜான்சன்
லண்டன்:
சீனாவில் தோன்றிய உயிர்கொல்லி கொரானா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அங்கு கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.
இதற்கிடையே, கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் ஒரு மாத காலத்துக்கு மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த பிரதமர் போரிஸ் ஜான்சன் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியானது.
கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்த எச்சரிக்கையை தொடர்ந்து ஊரடங்கு குறித்து அரசு பரிசீலிப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இங்கிலாந்தில் டிசம்பர் 2-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.