நாமக்கல் மருத்துவக் கல்லூரி, கட்டும் போதே இடிந்து விழுந்தது குறித்து கமல் ஹாசன் டுவிட்டர் பக்கத்தில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
நீங்களும் இப்படித்தான் விரைவில் உதிர்ந்து போவீர்கள்: மருத்துவ கல்லூரி கட்டடம் இடிந்தது குறித்து கமல்ஹாசன் டுவீட்
பதிவு: அக்டோபர் 30, 2020 17:34
கமல் ஹாசன்
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் டுவிட்டர் பக்கத்தில் ‘‘
நாமக்கல் மருத்துவக் கல்லூரி, கட்டும் போதே இடிந்து விழுந்திருக்கிறது.
மக்கள் வரிப்பணம் 336 கோடி ரூபாய் உருமாறும் கோலம் இது.
சட்டமன்றத் தேர்தலுக்குள் கட்டி முடித்து அரசியல் ஆதாயம் தேடும் அவசரக் கோலமே இந்த அலங்கோலத்திற்குக் காரணம்.
உயிர் காக்கும் மருத்துவமனை உருவாகும் போதே உடைந்து போயிருக்கிறது.
நினைவிருக்கட்டும்...
நீங்களும் இப்படித்தான் விரைவில் உதிர்ந்து போவீர்கள்.
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்யாதிருங்களய்யா.
மக்கள் நீதி மலர…
தக்க தருணம் இதுவே’’
எனப் பதிவிட்டுள்ளார்.
Related Tags :