கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அரசின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரின் முன்ஜாமீன் மனுக்களை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
கேரள தங்கக் கடத்தல் வழக்கு- சிவசங்கருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட் மறுப்பு
பதிவு: அக்டோபர் 28, 2020 11:27 IST
சிவசங்கர்
திருவனந்தபுரம்:
கேரள தங்க கடத்தல் தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சுங்கத்துறை தொடர்ந்த வழக்கில், முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளர் எம்.சிவசங்கர் முன்ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய ஐகோர்ட், இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது சிவசங்கருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட் மறுத்துவிட்டது. அவரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதனையடுத்து சிவசங்கடிரை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். திருவனந்தபுரம் ஆயுர்வேதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை அங்கிருந்து அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டதையடுத்து சிவசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :