முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
பதிவு: அக்டோபர் 23, 2020 14:55
கபில் தேவ்
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் ஆல்ரவுண்டராகவும் இருந்தவர் கபில் தேவ். 1983ம் ஆண்டில் இந்தியா முதல் முறை உலகக் கோப்பையை வென்றபோது, அணியின் கேப்டனாக வழி நடத்தியவர் கபில்தேவ். தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகள் குறித்த தனது கருத்துக்களை கபில் தேவ் தனக்கே உரிய பாணியில் பதிவு செய்து வந்தார்.
இந்நலையில் கபில் தேவுக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அவர் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருக்கு ஏற்கனவே நீரிழிவு தொடர்பான உடல்நலக் கோளாறு இருந்தது. இதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :