ரஷ்யாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
ரஷ்யாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்தது
பதிவு: அக்டோபர் 23, 2020 01:24
கொரோனா வைரஸ்
மாஸ்கோ:
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 4 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 11 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷ்யாவில் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 15,971 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 14,63,306 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு மேலும் 290 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆயிரத்து 242 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 11 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3.30 லட்சத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.
Related Tags :