மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பிரதமருக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எஸ்.பி.பி-க்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: பிரதமருக்கு ஆந்திரா முதல்வர் கடிதம்
பதிவு: செப்டம்பர் 28, 2020 17:21
எஸ்பிபி - ஜெகன் மோகன் ரெட்டி
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நலம் தேறிவந்த நிலையில், கடந்த 24-ந்தேதி அவரது உடல்நிலையில் திடீரென பின்னடைவு ஏற்பட்டது. டாக்டர்களின் தீவிர சிகிச்சை பலனின்றி 25-ந்தேதி மதியம் காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், பெரும்பாலான மாநில முதல்வர்கள் உள்பட முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
தமிழக அரசின் காவல் மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டில் கடிதம் மூலம் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Related Tags :