அரியர் மாணவர்களின் அரசன் எடப்பாடியார் என தமிழக சட்டசபையில் கருணாஸ் எம்.எல்.ஏ. புகழாரம் சூட்டினார்.
கொரோனா பிரச்சினையால் தேர்வு எழுத முடியாமல் போன எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர். ஆனால் கல்லூரிகளில் கடந்த செமஸ்டர் தேர்வுகள் தள்ளிப்போன நிலையில் அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறதோ? என மாணவர்கள் தவித்து வந்தனர்.
அவர்களுக்கு ஜாக்பாட்டாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த செமஸ்டர் தேர்வுகளில் ஆல்பாஸ் செய்ததோடு மட்டுமின்றி அரியர் வைத்திருந்த மாணவர்களையும் ஆல்பாஸ் செய்து திக்குமுக்காட வைத்து விட்டார்.
இந்நிலையில் அரியர் மாணவர்களின் அரசன் எடப்பாடியார் என தமிழக சட்டசபையில் கருணாஸ் எம்.எல்.ஏ. புகழாரம் சூட்டினார்.
10ம் வகுப்பு மாணவர்கள் வேண்டிய எந்த சாமியும் செய்யாததை செய்தார் எடப்பாடி பழனிசாமி என்றும் அவர் கூறினார்.