நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள மாநிலமான நைஜரில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர்.
நைஜீரியாவில் இரண்டு துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 22 பேர் பலி
பதிவு: செப்டம்பர் 04, 2020 22:36
துப்பாக்கிச் சூடு
நைஜர் மாநிலத்தின் டுக்கு என்ற இடத்தில் வசித்து வரும் மக்களை துப்பாக்கி ஏந்திய கும்பல் கடத்த முயற்சி செய்துள்ளனர். அப்போது உள்ளூர் பாதுகாப்பு படையினர் அவர்களது திட்டத்தை முறியடித்தனர். அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 17 பேரும், துப்பாக்கி ஏந்திய கும்பலைச் சேர்ந்த சிலரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த வாரத்தில் ஏற்கனவே பெண்கள் மற்றும் போலீஸ்காரர் உள்பட ஐந்து சுட்டுக்கொலை செய்திருந்தனர். இந்த மாநிலத்தில் கடந்த சில வருடங்களாக வன்முறை அதிகரித்து வருகிறது. துப்பாக்கி வைத்துள்ள கும்பல் ஊருக்குள் புகுந்து மக்களை கொன்று குவிக்கும் சம்பவம் அதிகமாக நடைபெற்று வருகிறது.
ஆகஸ்டு மாதம் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ராணுவ தளத்தை குறிவைத்து தாக்கினர். இதில் மூன்று ராணுவ வீரர்கள் பலியாகினர்.
Related Tags :