எனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது என பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே. அத்வானி தெரிவித்துள்ளார்.
ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறியுள்ளது: எல்.கே. அத்வானி
பதிவு: ஆகஸ்ட் 04, 2020 21:31
எல்.கே. அத்வானி
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நாளை நடைபெற இருக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். ராமர் கோவில் கட்டுவதில் மிகவும் ஆர்வம் காட்டிய பா.ஜனதா தலைவர்களில் ஒருவர் எல்.கே. அத்வானி.
ராமர் கோவில் கட்டப்படுவது குறித்து எல்.கே. அத்வானி கூறுகையில் ‘‘ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற எனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது. இது எனக்கு மட்டுல்ல, நாட்டு மக்களுக்கும் மகத்தான, வரலாற்று சிறப்புமிக்க நெகிழ்ச்சியான நாள். ராமர் கோவில் அமைவதற்காக தியாகங்கள் மேற்கொண்ட அனைவரையும் நன்றியுடன் நினைவுகூருகிறேன்’’ என்றார்.
Related Tags :