உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் மாதம் வரை இலவச எரிவாயு சிலிண்டர்: மத்திய அமைச்சர் தகவல்
பதிவு: ஜூலை 08, 2020 16:48
உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு சிலிண்டர்
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மார்ச் மாதம் 25-ந்தேதியில் இருந்து நாடு தழுவிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அப்போது ஏழை குடும்பங்கள் பாதிக்கப்படும் என்பதால் மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தது.
அதில் உஜ்வாலா திட்டத்தில் இடம்பிடித்துள்ள ஏழைகளுக்கு இலவசமாக சமையல் கியாஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் வரை வழங்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. இதனால் இந்த திட்டத்தை ஜூலை 1-ந்தேதியில் இருந்து மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். செப்டம்பர் மாதம் வரை வழங்க கூடுதலா 13,500 கோடி ரூபாய் செலவாகும் எனத் தெரிவித்துள்ளார்.