புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்க நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
6 மாநிலங்களுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகமான அளவில் திரும்பியுள்ளனர்: நிர்மலா சீதாராமன்
பதிவு: ஜூன் 18, 2020 16:48
நிர்மலா சீதாராமன்
நாடு தழுவிய ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்கள் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. மே 1-ந்தேதியில் இருந்து மத்திய அரசு சிறப்பு ரெயில்களை ஏற்பாடு செய்தது. இந்த ரெயில்கள் மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த மாநிலங்கள் திரும்பினர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில் ‘‘புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்க நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பீகார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களுக்கு அதிகமான தொழிலாளர்கள் திரும்பியுள்ளதை அடையாளம் கண்டுள்ளோம்.
நாட்டின் உள்ள அனைத்து தொழிலாளர்கள் லாக்டவுனின் தொடக்க காலத்தில் சொந்த கிராமம் செல்ல விரும்பினர். அதன்பின் மத்திய மற்றும் மாநில அரசுகள் அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்ததால், மீண்டும் அங்கே சென்றனர்’’ என்றார்.