கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோருக்கு உதவும் வகையில் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு தங்களது ஒருநாள் சம்பளமான 33 கோடி ரூபாயை சிஆர்பிஎப் வீரர்கள் வழங்கியுள்ளனர்.
கொரோனா பாதிப்பு - பிரதமர் நிவாரண நிதிக்கு 33 கோடி ரூபாய் வழங்கிய சிஆர்பிஎப் வீரர்கள்
பதிவு: மார்ச் 26, 2020 19:15
பிரதமர் மோடி
புதுடெல்லி:
கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, பிரதமரின் தேசிய நிவாரண நிதி மற்றும் மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோருக்கு உதவும் வகையில் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு தங்களது ஒருநாள் சம்பளமான 33 கோடி ரூபாயை சி.ஆர்.பி.எப். வீரர்கள் வழங்கியுள்ளனர்.
Related Tags :