மத்திய பிரதேசம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான புதிய அரசு இன்றிரவு 9 மணியளவில் பதவியேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா வெளியேறி பாஜகவில் இணைந்தார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேரும் ராஜினாமா செய்தனர். அவர்களில் 6 மந்திரிகளின் ராஜினாமாவை மட்டும் சபாநாயகர் ஏற்றார்.
இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான புதிய அரசு இன்றிரவு 9 மணியளவில் பதவியேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அம்மாநிலத்தின் தலைநகர் போபாலில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக, இன்றிரவு 7 மணியளவில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் புதிய முதல் மந்திரி தேர்வு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.