குரூப்-1 தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக்கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். முறைகேடு செய்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள், மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்கள், இடைத்தரகர்கள் என பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே குரூப்-1 தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக திமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், குரூப்-1 தேர்வு முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கூறப்படிருந்தது.
2015ல் தேர்வான 75 பேரில் 64 பேர் குறிப்பிட்ட 2 பயிற்சி மையங்களில் படித்தவர்கள் என்பதாலும், வெளிமாநிலத்தில் அச்சிடும் பணி நடந்துள்ளதாலும் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திமுக மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.