ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோரினார்.
தும்கா தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரைவிட 13 ஆயிரத்து 188 வாக்குகள் வித்தியாசத்திலும் பர்ஹைட் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரைவிட 25 ஆயிரத்து 740 வாக்குகள் வித்தியாசத்திலும் அவர் வெற்றி பெற்றுள்ளார்.
இதற்கிடையில், இதற்கிடையில், பாஜக சார்பில் அங்கு நடைபெற்ற ஆட்சிக்கு முதல் மந்திரியாக தலைமை தாங்கிவந்த ரகுபர் தாஸ் அம்மாநில கவர்னர் திரவுபதி முர்மு-வை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.
அவரை தொடர்ந்து அங்கு புதிய அரசு அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள முன்னாள் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் இன்றிரவு கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.