தமிழகத்தில் பருவமழை பாதிப்புகள் பற்றி முதல் அமைச்சர் பழனிசாமி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பருவமழை பாதிப்புகள்- உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
பதிவு: டிசம்பர் 02, 2019 11:35
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி அழுகத் தொடங்கி உள்ளன.
இந்நிலையில், பருவமழை பாதிப்புகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து முதல் அமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.