தலைமை செயலகத்தில் பருவமழை பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.
பருவமழை பாதிப்புகள், நிவாரணப் பணிகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை
பதிவு: டிசம்பர் 01, 2019 15:46
முதலமைச்சர் பழனிசாமி
சென்னை:
தமிழகமெங்கும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதையடுத்து, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், பருவமழை பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
மழையையொட்டி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நிவாரண பணிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.