குஜராத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மர்ம நபர்களால் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் பயங்கரம் - ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கழுத்தறுத்து கொலை
பதிவு: நவம்பர் 29, 2019 18:03
கொலை நடைபெற்ற பகுதி
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் டகோட் மாநிலம் தர்காடா மஹுடி கிராமத்தில் பரத் பலஸ்(40) தனது குடும்பத்திடன் வசித்துவந்தார். இவருக்கு சமிபென் (38) என்ற மனைவியும், திபிகா (12), ஹேம்ராஜ் (10), தினேஷ் (8), ரவி (6) என 4 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், பரத் பலஸ் நேற்று இரவு தனது வீட்டில் குடும்பத்துடன் உறங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது அவரது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் சிலர் தாங்கள் கொண்டுவந்த பயங்கர ஆயுதங்களை உறங்கிக்கொண்டிருந்த பரத், அவரது மனைவி சமிபென் மற்றும் 4 குழந்தைகள் என அனைவரையும் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இந்த கொலை இன்று காலையில்தான் அப்பகுதியில் வசிக்கும் அக்கம்பக்கத்தினருக்கு தெரியவந்ததையடுத்து, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், இந்த கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாக தெரிவித்துள்ளனர்.
Related Tags :