நேபாளத்தில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.
நேபாளம்: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 17 பேர் பலி
பதிவு: நவம்பர் 27, 2019 19:40
விபத்து நடந்த பகுதி
காத்மாண்டு:
நேபாளம் நாட்டின் அர்ஹாகச்ஸ் மாவட்டம் சந்திஹர்கா பகுதியில் இருந்து பட்வால் நகர் நோக்கி ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அதில் 30-க்கும் அதிகமானோர் பயணித்தனர்.
நர்பனி என்ற இடத்தில் உள்ள மலைப்பாங்கான பகுதியை கடந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் 400 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 17 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பஸ்சில் சிக்கி படுகாயமடைந்த 11 பேரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் சில பயணிகள் விபத்து நடந்த மலைப்பாங்கான பகுதியில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Related Tags :