அதிமுகவின் அடித்தளம் மிகவும் வலுவாக இருக்கிறது. ரஜினி-கமல் இணைந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அ.தி.மு.க.வின் அடித்தளம் மிகவும் வலுவாக இருக்கிறது. யார் இணைந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.