தீபாவளி பண்டிகை வேளையில் டாஸ்மாக் கடைகளில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 455 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சபாஷ் குடிமகன்கள்: டாஸ்மாக் நிர்ணயித்த இலக்கை தாண்டி தீபாவளிக்கு ரூ.455 கோடிக்கு மது விற்பனை
பதிவு: அக்டோபர் 28, 2019 21:22
மதுபான கடையில் அலைமோதும் கூட்டம் (பழைய படம்)
சென்னை:
தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதும் என்பதால் அதிக அளவில் விற்பனை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்படும்.
அவ்வகையில் இந்த ஆண்டு ரூ.385 கோடிக்கு மது விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியானது.
அதற்கேற்ப தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்கள் விடுமுறை என்பதால் விற்பனை களைகட்டியது. குறிப்பாக தீபாவளி நாளான நேற்று காலை முதல் இரவு வரை டாஸ்மாக் கடைகள் திருவிழா போன்று காட்சியளித்தது.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தில் 455 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆனதாக டாஸ்மாக் உயரதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன்பு அதாவது அக்டோபர் 25ம் தேதி ரூ.100 கோடிக்கும், மறுநாள் ரூ.183 கோடிக்கும் , தீபாவளி அன்று ரூ.172 கோடிக்கும் மது விற்பனை ஆகியுள்ளது. இது கடந்த ஆண்டு விற்பனையை விட 130 கோடி ரூபாய் அதிகமாகும். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விடவும் 70 கோடி அதிகமாகவே விற்பனை ஆகியுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 4600 டாஸ்மாக் கடைகள் உள்ளன. சென்னையில் மட்டும் 300 கடைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :