சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் வழக்கம் போல் இன்று பள்ளிகள் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.
கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில், சென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.