தெலுங்கானா மாநில கலாச்சாரத்தை புரிந்து வைத்திருப்பதால் எந்தவித சிரமமும் எனக்கு ஏற்படாது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
நகரி:
தெலுங்கானா மாநில புதிய கவர்னராக அறிவிக்கப்பட்ட தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை சிறப்பு விமானம் மூலம் ஹைதராபாத் பேகம்பேட்டை விமான நிலையத்துக்கு சென்றார்.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அவரை வரவேற்றனர்.
விமான நிலையத்தில் இருந்து வெளிய வந்த தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்தபோது ஐதராபாத்திற்கு அடிக்கடி வந்துள்ளேன். இதனால் தெலுங்கானா மாநில கலாச்சாரத்தை நான் புரிந்து வைத்திருக்கிறேன். அதிக முறை இங்குள்ள மக்களை நேரில் பார்த்ததால் அவர்களையும் புரிந்து வைத்திருக்கிறேன்.
தெலுங்கானா மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பது எனக்கு தெரியும். அதற்கேற்ப நான் செயல்படுவேன். நான் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால் பேதம் பார்க்காமல் செயல்படுவேன்.
இங்குள்ள கலாச்சாரம் பொதுமக்களை புரிந்து வைத்திருப்பதால் இங்கு பணியாற்றுவதில் எந்தவித சிரமமும் எனக்கு ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.