தெலுங்கானா மாநில கவர்னராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நாளை பதவி ஏற்கிறார். அவருக்கு அம்மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
தெலுங்கானா கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் நாளை பதவி ஏற்பு
பதிவு: செப்டம்பர் 07, 2019 22:57
தமிழிசை சவுந்தரராஜன்
ஐதராபாத்:
தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை, தெலுங்கானா மாநில கவர்னராக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆணை பிறப்பித்தார்.
இதையடுத்து, தலைவர் பதவி மற்றும் பா.ஜ.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் தமிழிசை சவுந்தரராஜன் விலகினார்.
இந்நிலையில், தெலுங்கானா மாநில கவர்னராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நாளை பதவி ஏற்கிறார். ஐதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் நாளை காலை 11 மணிக்கு பதவி ஏற்பு விழா நடக்கிறது. தெலுங்கானா மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராக்வேந்திரா எஸ்.சவுகான், டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜனுக்கு கவர்னராக பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.