தற்கொலைத் தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ். அமைப்பு இலங்கையை தேர்ந்தெடுத்தது ஏன்? என்பது தொடர்பாக அதிபர் சிறிசேனா விளக்கம் அளித்துள்ளார். #SriLankaBlasts #Sirisena
ஆனால், ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய தேசிய தவ்ஹீத் ஜமாத் (என்.டி.ஜே.) அமைப்பு மீது அரசு குற்றம்சாட்டியது. அத்துடன் அந்த அமைப்பு தடை செய்யப்பட்டது.
இந்த நிலையில் பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த இலங்கை அதிபர் சிறிசேனாவிடம், ஐ.எஸ். அமைப்பினர் தாக்குதலை அரங்கேற்ற இலங்கையை தேர்வு செய்ய காரணம் என்ன? என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் பதிலளித்த சிறிசேனா, “நான் மிகவும் அதிர்ச்சியில் இருக்கிறேன். ஐ.எஸ். அமைப்பு ஏன் இலங்கையை தேர்வு செய்தது? என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் ஐ.எஸ். அமைப்பால் உலகின் சக்தி வாய்ந்த நாடுகளை எதிர்க்க முடியவில்லை. எனவே தாங்கள் இன்னும் செயல்பாட்டில்தான் இருக்கிறோம் என்பதை உலகுக்கு உணர்த்தவே இலங்கையை அவர்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டார். #SriLankaBlasts #Sirisena