தமிழகத்தின் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று நன்றி தெரிவித்துள்ளார். #MaduraiAIIMS #NirmalaSitharaman
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பதிவு: டிசம்பர் 17, 2018 20:35 IST
மாற்றம்: டிசம்பர் 17, 2018 21:03 IST
புதுடெல்லி:
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அதுகுறித்த அறிவிப்பு உறுதிபடுத்தப்படாமலேயே இருந்து வந்தது.
கடந்த ஜூன் 20-ம் தேதி தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் உள்ள தோப்பூரில் அமைய இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆயிரத்து 258 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரையில் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு 45 மாதங்களில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக, பாதுகபபு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் டுவிட்டரில் கூறுகையில், தமிழகத்தின் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு நன்றி.
மேலும், பிரதமர் மோடி, மத்திய மந்திரி ஜெ.பி.நட்டா மற்றும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். #MaduraiAIIMS #NirmalaSitharaman