செய்திகள்
தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தலைவர்கள்

அதிமுக தேர்தல் அறிக்கையில் அசத்தலான அறிவிப்புகள்

Update: 2021-03-14 13:49 GMT
பொங்கல் பண்டிகைக்கான பரிசுத்தொகை 2500 ரூபாய் வழங்கும் திட்டம் தொடரும், நகர பேருந்துகளில் மகளிருக்கு 50 சதவீத கட்டண சலுகை உள்ளிட்ட பலவேறு வாக்குறுதிகளை அதிமுக வழங்கி உள்ளது.
சென்னை:

அதிமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. அதில் உள்ள முக்கிய வாக்குறுதிகள் வருமாறு:

* குடும்ப தலைவிகளுக்கு குல விளக்கு திட்டத்தின்கீழ் ரூ.1500, அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்

* அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சோலார் சமையல் அடுப்பு வழங்கப்படும்

* பொங்கல் பண்டிகைக்கான பரிசுத்தொகை 2500 ரூபாய் வழங்கும் திட்டம் தொடரும்

* பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு ஒரு வருடமாக அதிகரிக்கப்படும்.

* அம்மா பசுமை வீடு திட்ட மானியம் ரூ.3.40 லட்சமாக உயர்த்தப்படும்

* மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என மாற்றப்படும்

* அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

* 9, 10, 11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படும்

* மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்  தேவர் பெயர் சூட்ட நடவடிக்கை

* நகர பேருந்துகளில் மகளிருக்கு 50 சதவீத கட்டண சலுகை

* வேலை இல்லாத இளைஞர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தெகை இரட்டிப்பாக்கப்படும்

* அமைப்பு சாரா ஓட்டுநர்களுக்கு விபத்து காப்பீடு வழங்கப்படும்

* காயிதே மில்லத் பெயரில் இஸ்லாமிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும்

* கரிசல், களிமண் எடுக்க தடையில்லா சான்று அளிக்கப்படும்

* பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்.

* பத்திரிகையாளர்களுக்கு குடியிருப்பு மனைகள் மற்றும் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும்

* 25000 ரூபாய் மானியத்தில் எம்ஜிஆர் பசுமை ஆட்டோ வழங்கப்படும்

* பழுதடைந்த அனைத்து மத ஆலயங்களும் புனரமைக்கப்படும்.

* மாவட்டந்தோறும் மினி ஐ.டி பார்க்.
Tags:    

Similar News