தமிழ்நாடு செய்திகள்
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் வர வேண்டும்- டி.டி.வி.தினகரன்
- அவரது ஆதங்கம் என்ன என்பது எல்லோருக்கும் தெரியும்.
- நான் அவரோடு தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன்.
சென்னை:
சென்னையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஓ.பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கிறார். அவரது ஆதங்கம் என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். அவரை எங்கள் கூட்டணிக்கு மீண்டும் கொண்டு வர டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைவர்கள் முயற்சி எடுக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து.
நான் அவரோடு தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். ஓ.பன்னீர் செல்வம் தன் முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரவேண்டும் என்றார். பேட்டியின் போது, முன்னாள் அமைச்சர் செந்தமிழன் மற்றும் கரிகாலன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.