கரூர் பெருந்துயரம் - த.வெ.க. செய்த தவறு, அரசின் நடவடிக்கை குறித்து சட்டசபையில் மு.க.ஸ்டாலின் விளக்கம்
- கரூர் கூட்ட நெரிசல் போன்ற துயர சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்க கூட்டு முயற்சியில் நடவடிக்கை எடுக்கப்படும்.
- காலை முதல் காத்திருந்த மக்களுக்கு த.வெ.க.வினர் உணவு, தண்ணீர் கூட ஏற்பாடு செய்யவில்லை.
கரூர் பெருந்துயர சம்பவம் நடைபெற்ற உடன் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம் அளித்தார்.
அப்போது கரூர் பெருந்துயரம் சம்பவம் தொடர்பாக முதலில் எங்களை பேச அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ். முழக்கமிட்டார்.
முதலமைச்சரை பேசவிடாமல் இ.பி.எஸ். உள்ளிட்ட உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். முதலமைச்சர் பேசியதும் வாய்ப்பு தருவதாக சபாநாயகர் கூறினார்.
சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* கரூர் சம்பவம் குறித்து அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசுவதற்கு முன்னதாக விளக்கம் அளிக்கிறேன்.
* கரூர் பெருந்துயர சம்பவத்தால் பெரும் அதிர்ச்சி, சோகம் ஏற்பட்டது.
* கரூர் கூட்ட நெரிசல் போன்ற துயர சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்க கூட்டு முயற்சியில் நடவடிக்கை எடுக்கப்படும்.
* 41 பேர் உயிர்களை பலி கொண்ட கரூர் துயர சம்பவம் மனதை உலுக்கியது.
* த.வெ.க. கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் கேட்டதால் வேலுச்சாமிபுரத்தில் பிரசாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
* 3 கூடுதல், 5 துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 517 காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
* அனுமதி அளிக்கப்படும் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பதால் அனுமதி வழங்கவில்லை.
* கரூர் த.வெ.க. பிரசாரத்திற்கு வழக்கத்தை விட அதிக போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டது.
* மதியம் 12 மணிக்கு த.வெ.க. தலைவர் கரூர் வருவார் என அறிவிப்பு வந்ததால் மக்கள் கூடினர்.
* 7 மணி நேரம் தாமதம் தான் மக்கள் அதிக அளவில் கூடுவதற்கு காரணம் ஆகி விட்டது.
* போதிய குடிநீர், உணவு போன்ற எந்த வசதிகளையும் ஏற்பாட்டாளர்கள் செய்யவில்லை.
* காலை முதல் காத்திருந்த மக்களுக்கு த.வெ.க.வினர் உணவு, தண்ணீர் கூட ஏற்பாடு செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.