தமிழ்நாடு செய்திகள்

கிட்னி திருட்டு - சிறப்பு புலனாய்வு குழு உடனடியாக விசாரணையைத் தொடங்க சட்டசபையில் இ.பி.எஸ். வலியுறுத்தல்

Published On 2025-10-16 11:41 IST   |   Update On 2025-10-16 11:41:00 IST
  • விசைத்தறி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி கிட்னி திருட்டு நடைபெற்றுள்ளது.
  • கிட்னி முறைகேடு நடந்துள்ளதை விசாரணை குழு உறுதி செய்துள்ளது.

சட்டசபையில் கிட்னி திருட்டு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* விசைத்தறி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி கிட்னி திருட்டு நடைபெற்றுள்ளது.

* ஏழை மக்களின் கிட்னியை திருடிய மருத்துவமனை மீது தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

* அரசின் விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் பாதிக்கப்பட்டோரை விசாரித்துள்ளனர்.

* கிட்னி முறைகேடு நடந்துள்ளதை விசாரணை குழு உறுதி செய்துள்ளது.

* உயர்நீதிமன்ற மதுரை கிளை அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

* சிறப்பு புலனாய்வு குழு உடனடியாக விசாரணையை தொடங்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News